ஸ்ரீ அகத்திய மஹா சிவ நாடி சோதிட நிலையம் இனைய வலை தளத்திற்கு
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
சித்தர்களும், ரிஷிகளும், தங்கள் தவ வலிமைகளை கொண்டு, வான் மண்டலத்தில் உள்ள கோள்களையும், அவற்றின் தன்மைகளையும், ஆழ்ந்து அறிந்து, நன்கு ஆராய்ந்து, அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் கால, நிலை மாற்றங்களை தெளிவாக “சோதிடம்” என்ற கலையின் மூலம் ஓலை சுவடிகள் வழியாக தெரிவித்து உள்ளார்கள். அவ்வாறு எழுதிய ஓலை சுவடிகளை, அதன் தன்மைகளுக்கு ஏற்ப, பகுத்து, தொகுத்து, அவற்றை “காண்டம்” என்று வகைப்படும் படி எளிமையாக அமைத்து உள்ளார்கள்.
இவ் ஓலை சுவடிகள் மூலம், அவரவர் தங்கள் கர்ம வினைகளை அறிந்து, அதை நீக்குவதற்கான உபாயங்களை அறிய முடியும். மேலும், இந்த சென்மத்தில் சித்தர்கள், ஞானிகள், ரிஷிகளை தினந்தோறும் அடிபணிந்து வணங்கி, இயன்ற அளவு அன்னதானம் மாதம்தோறும் எளியவர்களுக்கு செய்து, நற்காரியங்கள் பலவற்றில் சித்தர்களின் அருளோடு சத்சங்கமாய் பங்கு கொண்டு, அவர்களின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, அவர்களையே குருவாக கொண்டு, இக லோக வாழ்க்கையில் சுபிட்சம், மகிழ்ச்சி, நிறைவு பெற்று, பர லோக வாழ்வில் நிரந்தரம் ஆகி, மீண்டும் பிறவா நிலையை அடைவதற்கு வழி வகைகள் உள்ளன.
தற்சமயம், அகத்தியர் நாடியும், மகா சிவ நாடியும் பார்க்கப்படுகிறது. அகத்தியர் நாடி என்பது சித்தர் அகத்தியர் எழுதியதாகும். மகா சிவ நாடி என்பது எம்பெருமான் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையே நடக்கும் உரையாடலும், அவற்றை ஏதாவது ஒரு சித்தர் தொகுத்து எழுதிய வடிவத்தில் அமைந்திருக்கும்.

நாடி சோதிடம்
சித்தர்களும், ரிஷிகளும், மனிதர்களுக்கு ஏற்படும் கால, நிலை மாற்றங்களை தெளிவாக “சோதிடம்” என்ற கலையின் மூலம் ஓலை சுவடிகள் வழியாக தெரிவித்து உள்ளார்கள்.
மேலும் >>
நாடி பார்க்கும் முறை
நாடி பார்ப்பவர் ஆணாக இருந்தால், வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்ணாக இருந்தால் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி சோதிடம் பார்க்கப்படும்.
மேலும் >>
நாடி காண்டங்கள்
நாடி சோதிட ஓலை சுவடிகளை, அதன் தன்மைகளுக்கு ஏற்ப, பகுத்து, தொகுத்து, அவற்றை “காண்டம்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் >>
நிகழ் நிலை வாசிப்பு
நேரில் வர முடியாதவர்களுக்கு, நிகழ் நிலை வாசிப்பு (Online reading) மூலம் நாடி சோதிடம் பார்க்கப்படும்
மேலும் >>செய்திகள் மற்றும் அறிவிப்புகள்

மந்திரங்கள்
மந்திரம் என்பது ஒலி வடிவமாக, சில சொற்றொடர்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் சில ஆற்றலை பெறுவது / வினைகள் நிகழ்த்த வேண்டுவது.
மேலும் >>
அறக்கட்டளை
எங்கள் குருநாதர் அகத்தியர் கட்டளைக்கு இணங்க, பொது சேவைக்கான அறக்கட்டளை, விரைவில் பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும் >>